Thursday, November 5, 2009

“தேவைகள்”எனத்
திருத்தப்பட வேண்டிய
மொழிப் பிசகல்.

கனவு !!!

கண்களில் இருந்து
வெளிவரத் துடித்தும்
கண்களுக்குள்ளேயே அடைப்பட்டுத்
தவிக்கும் மோக நிலை.

மொழி !!!

உணர்வுகளின் தாய்.
மௌனத் தவத்தின்
மேனகை.

அழகு !!!

உயிரைக் குடிக்கும்
ஓர் உவமையற்ற
அகராதிச் சொல்.

நெற்றி !!!

முத்தங்களின்
சுருக்குப் பை.

கண்கள் !!!

கானல் நீராய்
இரு வேறு எண்ணங்களை
கண்ணீரால் நிரப்பிக்
கொண்ட கண்ணாடிக் கூடு.

கூந்தல் !!!

தலைகீழாய்
பாய்கின்ற நயாகரா...

புன்னகை !!!

நிர்வாணப் பால்...

மழை !!!

ஒரே கனத்தில்
பெண்மைக்கு-ஆண்மையும்
ஆண்மைக்குப்-பெண்மையும்
சில்லெனப் பொழியும்
மன்மதம்....

வாழ்க்கை !!!

பயணம்...

பயணம் !!!

விடைத்
தெரியாதக் கேள்வி...

ஜனனம் !!!

வரம் சாபமாய்...

மரணம் !!!

சாபம் வரமாய்...

புல்கள் !!!

ஸ்பரிசங்களைச்
சுரக்கும்
பூமியின் விரல்கள்...

பூக்கள் !!!

இரு
பொருள் தரும்
இரட்டைக் கிழவி...

காற்று !!!

இறைவனின்
மந்திரம்...

கவிதை !!!